புதுச்சேரியில் நேற்று முன்தினம் (மே 7) வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் போக்குவரத்துறை இயக்குநர் அலுவலகம் அருகே கோணிப்பையில் இருந்து இளைஞரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
பின் இளைஞரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விசாரணையில் நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கமல் என்பது தெரியவந்தது.
கணவனை கொலை செய்த மனைவி கைது பின் அவரது மனைவி ஸ்டெல்லா மேல் சந்தேகம் ஏற்பட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், குடும்பத் தகராறு காரணமாக தனது சகோதரி மற்றும் பிரபல ரவுடி சேர்ந்து தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, காவல்துறையினர் ஸ்டெல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். பின் புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.