சென்னை: தமிழ்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 25 ஆம் தேதி முதல் https://tngptc.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார். ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக்மாணவர் சேர்க்கை
2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுடன், மேலும் மூன்று இணைப்புப் கல்லூரிகள் இந்தாண்டு ஆன்லைன் கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.