தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மூவருக்கு பிணை மறுப்பு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் மூன்று பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court

By

Published : Sep 3, 2019, 11:23 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி, பலர் பாலியல் வன்புணர்வு செய்ததாக, குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஜூலை மாதம் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில், பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களில் அருண் உள்ளிட்ட மூன்று பேர் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு பிணை வழங்கினால், அது விசாரணையை பாதிக்கும் எனவும், அவர்களது செயலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூன்று பேரின் பிணை மனுக்களையும் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details