சென்னை,இன்று (மே16)காலை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே சாலையில் சென்ற அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் கீழே எச்சில் துப்பியுள்ளார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் தன்னை நோக்கி ஏன் எச்சில் துப்பினாய் எனக்கூறி அந்த நடத்துனரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் நடத்துனரின் முகம் கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது. காயம் அடைந்த நடத்துனரை பொதுமக்கள் மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.