சென்னை சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி(33). இவர் பிளம்பர் வேலை பார்த்து வந்தார்.
மதுபோதையில் நண்பரை கொலை செய்தவர்களுக்கு காவல் துறை வலைவீச்சு! - Latest chennai news
சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறின்போது நண்பரைக் கொலை செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று(செப்.16) இரவு ஆண்டனி நண்பர்களான ஐயப்பன் மற்றும் சிலருடன் சேர்ந்து கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மது போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராற்றில் ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஆண்டனியைக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
பிறகு அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோடம்பாக்கம் காவல் துறையினர் ஆண்டனியின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.