பிரபல நடிகை பார்வதி நாயர் கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் திருட்டு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைகடிகாரம், லேப்டாப், கேமரா, செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து தன் மீது பொய் புகார் சுமத்துவதாக சுபாஷ் சந்திரபோஸ் பார்வதி நாயர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் சுபாஷ் சந்திரபோஸ் மீது புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, சுபாஷ் சந்திரபோஸ் தனது புகைப்படத்தை வெளியிட்டும், செல்போனில் தொடர்பு கொண்டும் மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சுபாஷ் சந்திரபோஸ் மீது மீண்டும் நுங்கம்பாக்கம் போலீசார் இன்று (டிச.6) மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துதல், இழிவுபடுத்தும் புகைப்படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுபாஷ் சந்திரபோஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரண்டு வழக்குகள் தொடர்பாக சுபாஷ் சந்திரபோஸிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: என் சினிமா கெரியரை காலி செய்ய பாக்குறான்'- கொந்தளித்த பார்வதி நாயர்!