கரோனா தொற்று பரவல் மீண்டும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு காவல் துறையினர் பொதுமக்களுக்குப் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் ஒரு நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்குக் கரோனா தொற்று பரவிவருவதால் சென்னை காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று சென்னை டவுட்டன் சிக்னல் அருகே வேப்பேரி போக்குவரத்துக் காவல் துறையினர் சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்துக் கிழக்கு மண்டல துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுநர்களுக்குக் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆட்டோவில் இரண்டு பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும், முகக்கவசம் இல்லாமல் பயணிகளை அனுமதிக்கக்கூடாது. பயணிகளுக்கு சானிடைசர் வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு சானிடைசர், முகக்கவசம் போன்றவற்றை வழங்கினார்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறை அதுமட்டுமின்றி பொதுமக்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என எழுதிய ஸ்டிக்கரை ஆட்டோவில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள்!