தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் குடியரசு தினம் - உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம் - independence day

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

By

Published : Jan 22, 2020, 10:39 AM IST

இந்தியா முழுவதும் வருகிற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை விமானநிலையத்திற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்புப் படை, மத்திய தொழிற்படை, விமான நிலைய காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னர் தான் அனுமதிக்கப்படுகிறது. விமான நிலைய காவல் உதவி ஆணையர் நடேசன், ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் உள்ள நுழைவு வாயில் பகுதிக்கு வரும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் பலத்த சோதனை செய்யப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் குடியரசு தினத்திற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க :பூக்கடையைச் சேதப்படுத்தியதாக திமுக பிரமுகர் மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details