சென்னை உயர்நீதிமன்றத்தில், பல்வேறு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டிய காவல்துறை அலுவலர்கள் ஆஜராகவில்லை. இதனால், தமிழ்நாடு டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை வருகின்ற 13ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு காவல்துறை அலுவலர்கள் ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
சென்னை: வழக்கு விசாரணைக்கு காவல்துறை அலுவலர்கள் முறையாக ஆஜராகவில்லை என்றால் டிஜிபி மற்றும் காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராக நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவை விலக்கக் கோரி நீதிபதி வேல்முருகனிடம் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் முறையிட்டார். இதையடுத்து, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்த நீதிபதி, இது குறித்து தங்களுக்கு கீழ் உள்ள காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டடார். மேலும், வரும் காலங்களில் வழக்கு விசாரணைக்கு காவல்துறை அலுவலர்கள் ஆஜராகவில்லை என்றால் டிஜிபி, காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.