தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி அழுத காவலர்!! - actor Damu speech

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் பேச்சைக் கேட்டு, பெண் காவலர் ஒருவர் தேம்பி தேம்பி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2023, 5:41 PM IST

போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி அழுத காவலர்!!

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்தின் காரணமாக பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை போதை பொருட்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடம் மாறி செல்லும் அவல நிலையும் ஏற்படுகிறது.

இதனால் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொளத்தூர் மாவட்டத்தில் போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற தலைப்பில் ஐ.சி.எப் அம்பேத்கர் மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 6 அரசு பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவர்களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாமு, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாடினார்.

குறிப்பாக போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மிமிக்ரி மூலமாக சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் உரிய விளக்கங்களுடன் எடுத்துரைத்தார். மேலும் தாய் தந்தையரே ஹீரோ எனவும் எங்களை போன்ற நடிகர்களின் கட் அவுட்களுக்கு பால் ஊற்றாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் உங்கள் வாழ்வு சிறக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது பெற்றோர்களும், பேராசிரியர்களும் தான் எனவும் நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடாமல் பேராசிரியர்களை கொண்டாடுங்கள் என்று பேசினார்.

மேலும் பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாப்பது தொடர்பாகவும், மரியாதை தருவது தொடர்பாகவும் மாணவர்களிடையே தாமு உருக்கமாக பேசிய போது, அரங்கத்தில் இருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கினர். அதிலும் குறிப்பாக அங்கு பாதுகாப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுத நெகிழ்ச்சி சம்பவம் அரங்கத்தில் நடந்தது. காக்கிக்குள்ளும் ஈரம் உள்ளது என்பது பெண் காவலர் அழுத காட்சிகள் மூலம் தெளிவானது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாமு, ”பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு மட்டுமே அடிமையாவது இல்லை, செல்போன் போன்ற பல வகைகளில் அடிமையாகின்றனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு என்ற பெயரில் வாரத்தில் 3 நாட்கள் பள்ளிகளில் நடத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், கல்விக் குழும முக்கோணம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க:எச்சரிக்கை பதாகைகள் இல்லாததால் தொடரும் விபத்துகள்.. சென்னையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details