சென்னை: அசோக் நகர் முதல் அவென்யூவில் நேற்றிரவு இரு திருநங்கைகள் சில நபர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இரவுப்பணியில் இருந்த துணை ஆணையர், அதைப் பார்த்துவிட்டு உடனடியாக விசாரணை நடத்த ரோந்து காவலருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
திருநங்கைகளுடன் தகராறு:தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர்கள், குமரன் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சசிகுமார், கே.கே நகர் காவலர் பாண்டி, முருகன், மணிகண்டன், மாரிமுத்து மற்றும் நாராயணன் என்பது தெரியவந்தது. இவர்கள் திருநங்கைகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. திருநங்கைகள் பணம் கேட்டு காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டபோது, வாக்குவாதம் முற்றி காவலர்கள் திருநங்கைகளைத் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.