தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர்களை கொலை செய்ய முயன்ற கும்பல்: போலீஸ் விசாரணை! - கொலை முயற்சி

புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இளைஞர்களை கொலை செய்ய முயன்ற கும்பல்
இளைஞர்களை கொலை செய்ய முயன்ற கும்பல்

By

Published : Jun 24, 2021, 11:46 AM IST

புதுச்சேரி: கோபாலன்கடை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரும் இவரது நண்பரும் நேற்றிரவு (ஜூன் 23) மேட்டுபாளையம் நெல்லுமண்டி வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தை மறித்த அடையாளம் தெரியாத கும்பல், சதீஷ் மற்றும் அவரது நண்பரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு சென்ற காவல் துறையினர், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றர்.

முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி:

முதல்கட்ட விசாரணையில், ஜூன் 21ஆம் தேதி இரவு வில்லியனூர் அம்மா நகரில் சதீஷ்-க்கும், அவரது நண்பர் அப்புவுக்கும் ஏற்பட்ட தகராறில் அப்பு, சதீஷை தாக்கியதாகவும், இதில், காயமடைந்த சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதும் தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக இந்த கொலை முயற்சி நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடரந்து, முன்விரோதம் காரணமாக சதீஷை தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலித்து ஏமாற்றிய நபரின் நண்பர்களை கொல்ல முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details