சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் 14ஆவது தெருவைச் சேர்ந்தவர் சரண்யா (23). இவர் அண்ணாநகரிலுள்ள ஆக்சிஸ் வங்கியில் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், இவர் பிப்ரவரி 22ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது படுக்கை அறையில் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர், நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்ற அவரது தந்தை சங்கர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிபி சத்திரம் காவல் துறையினர், சரண்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணையில், சரண்யா கோடம்பாக்கத்தில் வசித்துவரும் ஐசக் மனோஜ்குமார் என்பவரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்துவந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், சரண்யா மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார்.