சென்னை:ஆவடி மிட்டனமல்லி எம்சி ராஜா தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் ராஜேஷ் குமார். இவர் நேற்றிரவு (ஏப்.28) தனது பணியை முடித்துவிட்டு வீட்டில் உறங்கினார். இதையடுத்து காலையில் எழுந்தபோது, வீட்டிலிருந்த பீரோவின் கண்ணாடி உடைந்திருப்பதையும், மேற்கூறையில் துளை விழுந்திருப்பதையும் கவனித்தார்.
சென்னையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி... வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு... - துப்பாக்கி குண்டு விவகாரம்
14:40 April 29
சென்னையில் துப்பாக்கிச்சூடு பயிற்சியின்போது அருகே உள்ள வீட்டில் குண்டு பாய்ந்துள்ளது.
அதோடு வீட்டில் துப்பாக்கி குண்டு ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட தகவலில், கைப்பற்றப்பட்ட குண்டு 9 எம்எம் வகை என்பதும் அருகிலுள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி வளாகத்திலிருந்து சுடப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிங்க:சென்னை மணலியில் ஆட்டோ ஓட்டுனர் கொலை: 4 பேர் கைது