தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை

சென்னையில் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம் மூலம் பல லட்சம் ரூபாயை நூதன முறையில் கொள்ளையடித்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இயந்திரத்தில் பணம் எடுக்கும் சிசிடிவி காட்சி
இயந்திரத்தில் பணம் எடுக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Jun 22, 2021, 1:18 PM IST

சென்னை: வளசரவாக்கம், தரமணி, வேளச்சேரி, விருகம்பாக்கம், வடபழனி, பெரியமேடு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செலுத்தும் இயந்திரம் மூலமாக சுமார் 20 லட்சம் ரூபாய் வரை கொள்ளை நடந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அனைத்து ஏடிஎம் இயந்திரங்களையும் ஆய்வு செய்த காவல் துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத இருவர் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து, பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

டெபாசிட் செலுத்தும் இயந்திரத்திற்குள் பணம் போடுவதுபோல் பணத்தை வைத்துவிட்டு, இயந்திரம் பணத்தை எடுக்கும் வரை சுமார் 20 நொடிகள் பணத்தை விடாமல் பிடித்தவாறே இருந்தால், பணம் உள்ளே செல்லாமல் பணம் கணக்கில் வரவு வைக்கப்படும். அப்போது கையில் பிடித்திருந்த பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

இயந்திரத்தில் பணம் எடுக்கும் சிசிடிவி காட்சி

இந்த நூதன முறையை பயன்படுத்தி சுமார் 10 முறை ஒரே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தது சிசிடிவி கேமரா பதிவில் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பணத்தை திருடிய கும்பல் டெல்லியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி தடுப்பு காவல் துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சினிமா படம் பார்த்து ஆடி காரை திருடிய இளைஞர்கள்: ஆப்பு வைத்த ஜிபிஆர்எஸ் கருவி!

ABOUT THE AUTHOR

...view details