தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18,035 பேர் மீது வழக்கு - பின் இருக்கை பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்

சென்னையில் இருசக்கர வாகனங்களின் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18,035 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18,035 பேர் மீது போலீசார் வழக்குபதிவு
பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18,035 பேர் மீது போலீசார் வழக்குபதிவு

By

Published : Jun 4, 2022, 10:33 AM IST

சென்னையில் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் போக்குவரத்து போலீசார் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் மே மாதத்தில் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி 98 பேர் பலியாகி உள்ளனர். அதில் ஹெல்மெட் அணியாமல் 18 பேர் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற பயணிகள் என்பது தெரியவந்தது.

18,035 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு

இதனை கட்டுப்படுத்தும் விதமாக மே 23ஆம் தேதி முதல் முன் இருக்கை மற்றும் பின் இருக்கை பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

அந்த வகையில், சென்னையில் மே 23ஆம் தேதி முதல் இதுவரை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக 21,984 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 21 லட்சத்து 98ஆயிரத்து 400 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த 18,035 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்டாக்கத்தியுடன் பெட்ரோல் போட வந்த கும்பல் ஊழியரைத் தாக்கிய சிசிடிவி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details