தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோன் வாங்கித் தருவதாக கூறி ரூ1.6 கோடி மோசடி! - லோன் மோசடி

சென்னையில் லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 1.6 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

லோன் வாங்கித் தருவதாக கூறி ரூ1.6 கோடி மோசடி
லோன் வாங்கித் தருவதாக கூறி ரூ1.6 கோடி மோசடி

By

Published : Jul 3, 2021, 8:54 AM IST

சென்னை: பழைய பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபாவதி (45). இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “எனக்கு அறிமுகமான விநாயகா ஆச்சார்யா (45), ஜகுபர் அலி (37) ஆகிய இருவரும் எனக்குச் சொந்தமான வீடு, காலி மனையை வைத்து லோன் வாங்கித் தருவதாகக் கூறினர்.

இதனால், என்னிடம் ஸ்டாம்பு பேப்பர்கள், வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். பின்னர், அதை வைத்து எனது சொத்தை ஜகுபர் அலிக்கு பதிவு செய்து, அதன் பேரில் தனியார் ஹோம் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றனர்.

1.6 கோடி ரூபாய் மோசடி:

மேலும், எனக்குத் தெரியாமலே எனது பெயரில் தொடங்கிய வங்கிக் கணக்கில் நிதி நிறுவனத்தில் பெற்ற கடன் தொகையை வரவு வைத்து, எனது பெயரிலுள்ள காசோலையை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொண்டனர். இருவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, நம்பிக்கை மோசடி செய்து என்னிடமிருந்து 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இருவர் கைது

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், தலைமறைவாக இருந்த விநாயகா ஆச்சார்யா, ஜகுபர் அலி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவர் மீதும் ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை மத்திய குற்றபிரிவு காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை வழக்கு: நசீம் உசேனுக்கு 4 நாள் காவல்

ABOUT THE AUTHOR

...view details