சென்னை:கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழ்நாடு அரசுப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது.
அந்த வகையில் சென்னை காவல் துறையினர் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் நேற்று (ஏப்.11) மட்டும் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 892 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 62 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.