தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், அபிராமபுரம் விசாலாட்சி தோட்டம், குருபுரம்சுப்பராயன் தெரு போன்ற பகுதிகளில் திமுகவினர் பேனர், பலூன், தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும்படை அலுவலர் சங்கரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்: திமுக வட்டச் செயலாளர்மீது வழக்குப்பதிவு - election code
தமிழ்நாடு தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் வைத்ததாக திமுக வட்டச்செயலாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக வட்ட செயலாளர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு
இதனையடுத்து தகவலின்படி விரைந்து சென்று திமுகவினர் வைத்திருந்த பேனர், தோரணங்களை காவல் துறையினர் அகற்றினர். மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் வைத்ததாக 123ஆவது வட்டச்செயலாளர் மூ.ராஜேந்திரன் என்பவர் மீது அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக ஒரு இடத்தில்கூட வென்று விடக்கூடாது - கமல்ஹாசன்