தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவுடி கும்பல் தாக்கிய காவலர் உயிரிழப்பு! - ST Thomas mount police station cases

சென்னை ஆலந்தூரில் ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஆயுதப்படை காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு!
ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு!

By

Published : Feb 10, 2023, 7:10 AM IST

சென்னை:ஆலந்தூர் கண்ணன் காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (32). இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி இரவு, தனது மைத்துனர் வாசுதேவன் என்பவருடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது வாசுதேவனின் செல்போனில் தொடர்பு கொண்ட அஜ்மல் என்ற நபர், தன்னை ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குவதாக கூறியுள்ளார். இதனையடுத்து விஜயன் மற்றும் வாசுதேவன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்குச் சென்று, அந்த கும்பலை தட்டிக் கேட்டுள்ளனர்.

அப்போது அந்த கும்பல் காவலர் விஜயன், வாசுதேவன் ஆதியோரை தாக்கி உள்ளது. இதில் காவலர் விஜயனின் நெற்றியில் காயம் ஏற்பட்ட நிலையில், கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. தொடர்ந்து காயம் அடைந்த விஜயன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொலை முயற்சி வழக்காக பதிவு செய்த பரங்கிமலை காவல் துறையினர், காவலரை தாக்கிய விவகாரத்தில் அஜித், வினோத், விவேக் மற்றும் ரவிகுமார் ஆகிய 4 பேரை பிப்ரவரி 7 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் விஜயன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த பரங்கிமலை காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் கைதாகியுள்ள அஜித் மற்றும் வினோத் ஆகிய இருவரும், ஏற்கனவே பழவந்தாங்கல் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கிய வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காவல் நிலையம் முன்பு விவசாயி தற்கொலை; அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details