சென்னை மவுண்ட் பகுதியின் போக்குவரத்து உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் நட்ராஜ். இவர் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நேர்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தலைக்கவசம் அணியாததால் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த கதி!
சென்னை: தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போக்குவரத்து உதவி ஆய்வாளர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
accident
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என உயர் நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், போக்குவரத்து உதவி ஆய்வாளரே தலைக்கவசம் அணியாமல் சென்று உயிரிழந்திருப்பது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.