சென்னை:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு கொடுத்த புகாரில், அரசின் எவ்வித அனுமதியின்றி Brightway International Tours and Travel என்ற பெயரில் அலுவலகம் நடத்தி, வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொண்டு, ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் சதீஷ்குமார் சொன்ன விவரம் உண்மையெனத் தெரியவர மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த போரூரை சேர்ந்த முகமது ரஃபி(52) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில், அரசின் அனுமதி பெறாமல் அலுவலகம் நடத்தி வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி சுமார் 40 நபர்களிடம் ரூ.70 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான நியமன கடிதத்தைக் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து முகமது ரஃபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், சுற்றுலா விசாவில் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வது சட்டத்திற்கு புறம்பானது என்றும், வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் புறப்படுவதற்கு முன்பு குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் சந்தேகங்களைச் சரிசெய்து கொள்ளவும்;