சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட தாம்பரம் மாவட்ட துணை காவல் ஆணையர் அலுவலகத்தில், முகாம் கண்காணிப்பளராக சிவபெருமாள் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தது.
இது குறித்து தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விசாரணை மேற்கொண்டார். இதில், திருவள்ளூர் மாவட்டம் பெருங்காவூரைச் சேர்ந்த செல்வி மீனா என்பவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தி மோசடி செய்யப்பட்டதாக கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அக்பர் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அக்பர், தனக்கு தெரிந்த தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் சிவபெருமாள் என்பவரிடம் கூறி பணத்தைப் பெற்றுத் தருகிறேன் என அவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது இந்த வழக்கை சுமூகமாக முடித்துத் தருகிறேன் என கூறிய முகாம் கண்காணிப்பாளர் சிவபெருமாள், கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் விஜயலட்சுமி என்பவர் ஏற்கனவே அந்த வழக்கை விசாரணை மேற்கொண்டதால், அவரிடம் சொல்லி உங்கள் பணத்தை பெற்று தருகிறேன் என அக்பரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.