தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெருவில் சுற்றித்திரிந்த கரோனா பாதித்த இளைஞர்! - chennai corona youth case

சென்னை: தெருவில் சுற்றித்திரிந்த கரோனா பாதித்த இளைஞர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Corona patient சென்னை ஆயிரம் விளக்கு தெருவில் சுற்றித்திரிந்த கரோனா நோயாளி chennai corona youth case aayiram vizhku
தெருவில் சுற்றித்திரிந்த கரோனா பாதித்த இளைஞர்

By

Published : Jun 16, 2020, 12:04 PM IST

Updated : Jun 16, 2020, 6:37 PM IST

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கு கடந்த 25ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் இவரை 40 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால், இவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் தெருவில் சுற்றித்திரிந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தியபோது, அந்த வாலிபர் நோயை பரப்பும் வகையில் வெளியே சுற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக சுகாதாரத் துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், ஆயிரம் விளக்கு காவல்துறையினர் உத்தரவை மீறிய அந்த வாலிபர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:'மு.க. ஸ்டாலின் கூறுவது முற்றிலும் தவறானது' - அமைச்சர் விஜய பாஸ்கர்

Last Updated : Jun 16, 2020, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details