தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த பொறியாளருக்கு போலீஸ் வலை! - police

சென்னை: அம்பத்தூர் அருகே பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற பொறியாளரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பொறியாளருக்கு வலைவீச்சு

By

Published : Jul 10, 2019, 7:49 AM IST

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா மெர்சி (26). இவருக்கும் கேரளாவின் மூணாறு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அருண்குமார் (32) என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது சித்ராவுக்கு 50 சவரன் தங்க நகைகள், மூன்று லட்சம் ரொக்கம், ஒரு பைக் ஆகியவற்றை சீர்வரிசையாக அவரது பெற்றோர்கள் கொடுத்தனர்.

அதன் பிறகு, அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு கலைவானர் நகர்ப் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் மூன்று லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி வாடகைக்கு வீடு எடுத்தனர். இதற்கிடையில், சரிவர வேலைக்குச் செல்லாமல் அருண்குமார் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து, புதிய தொழில் தொடங்குவதற்காக மனைவி சித்ராவிடம் பயணம் கேட்டுள்ளார்.

இதன் பிறகு, கடந்த மாதம் தன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு பெற்றோரிடம் பணம் வாங்க சித்ரா மெர்சி சென்றுள்ளார். பின்னர், மீண்டும் அம்பத்தூருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது இவர் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது, அருண்குமார் அவரது பெற்றோர் ஆகியோர் வீட்டை காலி செய்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, அருண்குமாரை தொடர்பு கொண்ட சித்ரவை, கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத்தில், தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல், தனது நகைகள், பணத்தை அபகரித்த அருண்குமார் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

அதன் பேரில், மோசடி செய்த அருண்குமார் அவரது பெற்றோர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details