தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் காவலர்களை தாக்கிய 3 பேர் கைது! - Police arrested

சென்னை: காவல் உதவி ஆய்வாளர்களை குடிபோதையில் தாக்கிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை

By

Published : Jun 24, 2019, 2:23 PM IST

சென்னை புளியந்தோப்புப் பகுதியில் நியூ பேரன்ஸ் சாலையில் உள்ள கலைஞர் பூங்கா எதிரே குடிபோதையில் 20-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒருவரைத் தாக்கிக்கொள்வதாக நேற்று (ஜூன் 23) இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இரவுப் பணியில் இருந்த புளியந்தோப்பு சரக உதவி ஆய்வாளர்கள் சஜிபா, ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

காவலர்களை தாக்கிய 3 பேர் கைது

அப்போது காவலர்களைக் கண்ட அனைவரும் சிதறி ஓட, அங்கிருந்த சிலரிடம் உதவி ஆய்வாளர் ஆனந்த் விசாரணை மேற்கொண்டார். அப்போது குடிபோதையில் இருந்த ஓட்டேரியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ், ஜானகிராமன், ஜகதீஸ் குமார் ஆகிய மூவரும் உதவி ஆய்வாளர் ஆனந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கினர். இதனைப் பார்த்த பெண் உதவி ஆய்வாளர் சஜிபா அவர்களைத் தடுக்க முற்பட்டார்.

அப்போது குடிபோதையில் இருந்த மூன்று பேரும் சஜிபாவையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து ரோந்துப் பணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மூன்று பேரையும் கைது செய்து ஓட்டேரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினரை தாக்கிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details