தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த பிரபல கொள்ளையன் கைது! - arrests

சென்னை: புறநகர் பகுதிகளில் பூட்டிய கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த பிரபல கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பிரபல கொள்ளையன் கைது

By

Published : Jul 12, 2019, 12:47 PM IST

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பூட்டிய வீட்டில் எட்டு சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் வேகமாக வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல் துறையினர் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளைஞர் திருமுல்லைவாயில் அமைந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மதன் என்கின்ற மன்மதன் (23) என்பது தெரியவந்தது.

இவர் 2014ஆம் ஆண்டு ஆவடி பாரத ஸ்டேட் வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கைது ஆகியுள்ளார். இதன் பின்பு திருநின்றவூர், பட்டாபிராம், அம்பத்தூர், கொரட்டூர், செங்குன்றம், மணலி என சி.டி.எச். சாலையில் உள்ள கடைகளின் ஷட்டரை உடைத்து திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததை ஒப்புக் கொண்டார்.

பிரபல கொள்ளையன் கைது

இதன் தொடர்ச்சியாக ஆவடியில் உள்ள கடைகள், பட்டாபிராமில் உள்ள அழகுநிலையம் போன்ற இடங்களில் ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதுமட்டுமல்லாமல் மன்மதன் ஓசூரில் நகைக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 29 ஆயிரம் ரொக்கம், எட்டு சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details