சென்னை:அம்பத்தூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (36). இவர், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், பாலாஜி நகர் தொழிற்பேட்டையில் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி ஹரிகிருஷ்ணன் நிறுவனத்தைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர், மறுநாள் அவர் வந்து பார்க்கும் போது நிறுவனத்தின் கதவிலுருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளைப் பொருள்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அன்று நடந்ததுபோல இன்றும் அதிகாலையில் நிறுவனத்திற்குள் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை, ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்தபடி செல்ஃபோன் வழியாக கண்காணிப்புக் கேமராவில் கண்டறிந்தார். உடனடியாக அவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பழனி தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்றனர்.