சென்னை மாநகர பேருந்தில் கோடம்பாக்கம் லிபர்ட்டி அருகே பயணித்த நபர் ஒருவர் கத்தியுடன் இருக்கும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோ பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் வீடியோவில் பதிவான முக அடையாளங்களை வைத்து கோடம்பாக்கம் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு, எம்ஜிஆர் நகர் தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(20) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.