சென்னை பாண்டிபஜார், தியாகராய நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு செல்ஃபோன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு செல்ஃபோன் கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவரையும், சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். இதில், செங்குட்டுவன் மீது கேரளாவிலும் செல்ஃபோன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.