தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை: பாய்ந்தது போக்சோ சட்டம்!

சென்னை: எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

Vadapalani

By

Published : Jul 27, 2019, 4:52 PM IST

சென்னை எம்ஜிஆர் நகர் சுந்தர்ராஜன் தெருவில் வசித்து வரும் 35 வயதுடைய பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 15 வயது மகள் சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக பெண்னைவிட்டு அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியன்(49) என்பவர் அந்த பெண்ணுக்கு நண்பராக அறிமுகமாகியுள்ளார். மனைவியை பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்துவந்த பாலசுப்பிரமணியனும், அந்த பெண்ணும் சேர்ந்து வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வாழ தொடங்கியுள்ளனர்.

வடபழனி காவல்நிலையம்

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெண் வேலைக்கு சென்ற பின்னர் அவரது மகளிடம் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து தகாத முறையில் பாலியல் ரீதியாகப் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பாலசுப்பிரமணியின் கொடுத்த தொல்லையை தாங்கி கொள்ள முடியாத மகள், தன் தாயிடம் தனக்கு நடந்ததை தெரிவித்துள்ளார். இதனால் பெண்ணுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இளம்பெண் அங்கிருந்து வெளியேறி தனது மகளுடன் எம்ஜிஆர் நகர் பகுதிக்கு சென்று குடியேறினார்.

இதனையடுத்து, தன் மகளுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து குழந்தைகள் நல அமைப்பினரிடமும், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, பாலசுப்பிரமணியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details