தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசு பள்ளிகளை பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, அவற்றை பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

abil
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

By

Published : Aug 18, 2021, 8:45 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. தற்போது, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இன்று, பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அப்போது பேசிய அவர், "இந்தியா டுடே பத்திரிக்கையில் முதலமைச்சர் முதல் இடத்தை பிடித்திருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை. ஜி.கே. மணிக்கும் பெருமை. தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்திருக்கிறீர்கள்.

5 கி.மீ., தூரத்திற்கு ஒரு தடுப்பணை

அதில் ஒவ்வொரு நதியிலும் 5 கி.மீ., தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர் மேலாண்மைக்கு நீரியல் வல்லுநர்களை கொண்ட குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் கல்வியில் சீர் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். கூடுதல் கல்வி நிலையங்கள் அமைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இந்த நிதிநிலை அறிக்கை 6 மாதத்திற்கானது தான். அடுத்த நிதிநிலை அறிக்கைகளில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளோம். இதனால் ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் கோடி என வருடத்திற்கு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.

வரும் காலங்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவோம். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லாமல் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஜி.கே. மணி, "வருவாய் பற்றாக்குறையை போக்குவதற்கு அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது? என்றார்.

ஜி.கே.மணி

அகவிலைப்படி நிறுத்தம்

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "அனைத்து துறைகளிலும் அகவிலைப்படியை தற்போது நிறுத்தியுள்ளோம். அதனால் 23 விழுக்காடு வருமானம் வளரும் என கணக்கிட்டு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கரோனா இரண்டாம் அலை வராதபோது, கணக்கிடப்படாமல் அகவிலைப்படிக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவறான செயலாகும். ஏழாவது ஆண்டில் வருவாய் பற்றாக்குறையை குறைத்து காட்டுவோம்" என்றார்.

எரிவாயுவால் மாநில அரசிற்கு வருவாய் இல்லை

தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, " எரிவாயு விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், " எரிவாயு விலை நிர்ணயம் செய்வது ஒன்றிய அரசு,கேஸ் ஏஜென்சி வசம் உள்ளது. அதன் மூலம் மாநில அரசிற்கு வருவாய் இல்லை. இருந்த போதும் விலை குறைப்பு தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்" என்றார்.

காவல் துறைக்கு கட்டாய பதவி உயர்வு

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி, "பகுதி நேர ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். காவல் துறையினர் 7-8 ஆண்டுகள் பணியில் இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், அனைவருக்கும் கட்டாய இலவச பேருந்து கட்டணம் வழங்க வேண்டும், ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், "அனைத்து கோரிக்கைகளும் தெளிவாக ஆராயப்பட்டு விளக்கமாக பதில் கொடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க:தேசிய நல்லாசிரியர் விருது - தமிழ்நாடு ஆசிரியர்கள் 2 பேர் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details