தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வில் முறைகேடு.? ஒரே தேர்வு மையத்தில் 700 பேர் தேர்ச்சி.. பாமக நிறுவனர் ராமதாசு கேள்வி.. - டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வு

நில அளவர் தேர்வில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வில் முறைகேடு
டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வில் முறைகேடு

By

Published : Mar 26, 2023, 4:48 PM IST

Updated : Mar 26, 2023, 5:29 PM IST

சென்னை:நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் இருந்து எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால், முறைகேடு நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசு வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசின் நில அளவையர் துறையில் அளவர் மற்றும் வரைவாளர் பிரிவில் காலியாக இருந்த 1,089 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. மொத்தமாக 29,800 தேர்வர்கள் இத்தேர்வை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இந்த மாத தொடக்கத்தில் இருந்து கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த வேலை வாய்ப்பிற்கு ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தேர்வாகி இருந்தனர். அவர்களின் பதிவெண்கள் கூட அடுத்தடுத்து வரிசையாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு தேர்வில் 700-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே பயிற்சி மையத்திலிருந்து தேர்வாகி இருப்பது முறைகேடு நடந்திருக்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணி; கலெக்டர் அறிவிப்பு

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு 1,089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎசுசி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வேலை வேண்டுமா!... அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணி; கலெக்டர் அறிவிப்பு

Last Updated : Mar 26, 2023, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details