சென்னை:ஆண்டுதோறும் சொத்துவரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசானது முடிவு செய்துள்ளது. அது தொடர்பான சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் நேற்று (மே.9) தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று (மே.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புறங்களிலும் சொத்து வரியை ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்த வகை செய்யும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகிறது.
ஆண்டுக்கு ஆண்டு சுமை: சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் அண்மையில் தான் 200% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதையே செலுத்த முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு இத்தகைய சுமையை தமிழ்நாட்டு மக்களால் சுமத்த முடியாது.