சென்னை: 186 நாடுகள் பங்கேற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டன.
இந்நிலையில், ஓபன் பிரிவில் இந்திய பி அணிக்கு வெண்கல பதக்கம் வென்றது. ஓபன் பிரிவில் இந்திய வீரர் நிகால் சரின் மற்றும் தமிழ்நாடு வீரர் குகேஷ் ஆகியோர் தங்கம் வென்றனர். அதேபோல், ஓபன் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.
பெண்கள் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், வைஷாலி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாடு மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள். இந்திய செஸ் வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'செஸ்-க்காக வந்தேன்... சேலை வாங்கிச் செல்கிறேன்': கென்யா பயிற்சியாளர்