தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பரப்புரைக்காக புதுவை வருகிறார் மோடி! - புதுச்சேரி வரும் மோடி

புதுச்சேரி: தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற பிப்.25ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளதாக பாஜக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரைக்காக புதுவை வருகிறார் மோடி
தேர்தல் பரப்புரைக்காக புதுவை வருகிறார் மோடி

By

Published : Feb 16, 2021, 8:52 PM IST

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக பிப். 25ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறவுள்ள பாஜக பொது கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

அதற்கு முன்னதாக அவர், புதுச்சேரி மாநில கூட்டணி கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து தேர்தல் சார்ந்த வியூகங்களை கேட்டு அறியவுள்ளார். மேலும், அவர் புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகளை சந்தித்து வருகின்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பொலிவுறு நகரத் திட்டம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details