தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1-ம் தேதி முதல் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன. கடைசி நாளான இன்று உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய தேர்வுகளுடன் முடிவடைந்தது.
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19 ம் தேதி வெளியிடப்படுகிறது - பொதுத் தேர்வு முடிவுகள்
சென்னை: 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 1 ஆம் தேதி தொடங்கி இன்றோடு முடிவடைந்த நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19 ம் தேதி தேர்வு முடிவுகள்
இதையடுத்து தமிழகம் முழுவதும் 70 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 29 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த பணிகளை விரைவாக முடித்து, ஏப்ரல் 19 ஆம் தேதி காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத் துறை இயக்குனர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.