தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு தேர்வு எழுத ஏப்ரல் 8 முதல் 12 வரை விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு - பதினொன்றாம் வகுப்பு

சென்னை: 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், ஏப்ரல் 8 முதல் 12ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள்

By

Published : Apr 2, 2019, 9:15 PM IST

தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர், ஒன்று முதல் இரண்டு பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள், தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகள் மூலம் சிறப்பு துணைத் தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தில்”ஏப்ரல்15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details