தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - plus 2

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

தேர்வு முடிவு

By

Published : Apr 19, 2019, 7:52 AM IST

தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இது தவிர பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதே போல், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாத சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details