சென்னை:11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 5 நூற்று 49 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாணவிகளும், 3 லட்சத்து 61 ஆயிரத்து 454 மாணவர்களும் எழுதினர்.
அவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்பட்டது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டார். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்தனர். மேலும் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட்டன.
அதில் 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று உள்ளனர். தமிழ்நாட்டில் தேர்ச்சி சதவீதம் 90.93 சதவீதமாக உள்ளது. தேர்வு எழுதிய 4 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாணவியர்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 968 பேர் தேர்ச்சிப் பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதமாக 94.36ஆக உள்ளது. 3 லட்சத்து 61 ஆயிரத்து 454 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 444 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.99 சதவீதமாக உள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர்களே 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்று உள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்கள் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேரில் 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி 90.07 சதவீதம் என இருந்தது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. தேர்வு எழுதிய பள்ளிகளில் 1792 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று உள்ளனர். 162 அரசுப் பள்ளி மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழ்ப் பாடத்தில் 9 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 13 பேரும், இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வேதியியல் பாடத்தில் 107 பேரும்,