தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆர் நினைவு நாளன்று உறுதிமொழி: தொண்டர்களை அழைக்கும் அதிமுக! - MGR 32nd Memorial Day

சென்னை: எம்ஜிஆர் நினைவிடத்தில் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

admk
admk

By

Published : Dec 19, 2019, 4:21 PM IST

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார். தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் நினைவு நாளன்று அவரது ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு நினைவு தினத்தை அனுசரிப்பார்கள்.

அவரது 32ஆம் ஆண்டு நினைவுநாள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் மலர் அஞ்சலி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

எம்ஜிஆர் நினைவிடம்

இதில், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் அதிகளவில் கலந்துகொள்ளுமாறு அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் - அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details