தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு! - HC

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : May 9, 2019, 3:02 PM IST


ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "2011ல் ஆசியியர் தகுதித் தேர்வு அறிமுகமானது. அறிமுகமாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில், ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தகுதித் தேர்வுகள் இதுவரை தமிழகத்தில் நடந்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் மூன்று முறைதான் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. தனி நீதிபதி தனது தீர்ப்பில் தேசிய தகுதித் தேர்வை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். அது தவறானது. தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதித் தேர்வை எழுத முடியாது.

எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். தனி நீதிபதி முன்பு நாங்கள் மனுதாரர் இல்லை என்பதால், இந்த மேல்முறையீட்டு வழக்கை, பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தெரிவித்தது. மேலும், அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details