சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "பிரேசிலில் நடைபெற்ற கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் 3 பதக்கம் வென்று தமிழ்நாடு வீராங்கனை ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார். அதேபோல் டென்னிஸ் பிரிவில் விளையாடிய ப்ரித்வி சேகர் பதக்கம் வென்றுள்ளார். இருவருக்கும் முதலமைச்சர் பாராட்டி ஊக்கத் தொகை வழங்கியுள்ளார்.
இனி வரும் காலத்தில் பங்குபெறும் அனைத்துப் போட்டிகளுக்கும் என்னென்ன உதவிகள் தேவையோ, அவை அரசின் சார்பாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 15ஆம் தேதிக்குள் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும்.