சென்னையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிந்த பின்னர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர். தேர்வு குறித்து அவர்களிடம் கேட்டபோது, "நீட் தேர்வு வினாத்தாள்களில் கடந்த ஆண்டைப் போன்று எழுத்துப் பிழை, வார்த்தை பிழை அமையவில்லை. ஆனால் அதேநேரம் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் ஓரிரு கேள்விகளில் ஆங்கில வார்த்தை நேரடியாக கேட்கப்பட்டிருந்தது" என தெரிவித்தனர்.
நீட் தேர்வில் இயற்பியல் பாடம் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து - chenani
சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல் பாடம் கடினமாக இருந்ததாகவும், வேதியியல் உயிரியல் பாடம் எளிதாக அமைந்திருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தேர்வு எழுதும் வகையிலும் வினாத்தாள் அமைந்திருந்தாவும், தேசிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் சற்று கடினமாக இருந்தாகவும் தெரிவித்த அவர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எளிதில் தேர்வு எழுதும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்திருந்ததாக கூறினர்.
தேர்வில் இயற்பியல் குறித்த கேள்விகள் கடினமாக இருந்தது என்றும், வேதியில், உயிரியல் பாடம் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர். மேலும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அதிக அளவில் பயிற்சி அளித்தால் அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவப் படிப்பில் கூடுதலாக சேர்வதற்கு வாய்ப்பாக அமையும் என வேண்டுகள் விடுத்தனர்.