சென்னை: பாரத், சனாதனம் என பல்வேறு தலைப்புகள் தற்போது பேசு பொருளாக இருந்தாலும், தமிழகத்தில், ஜி20 உச்சி மாநாட்டின் போது ஜோ பைடன் - ஸ்டாலின் சந்திப்பு பல்வேறு தரப்பினரிடையே சூடுபிடிக்கும் பேசு பொருளாக இருந்து வருகிறது. அண்மையில் நடந்த ஜி20 உச்சி மாநாடு விமர்சையாக பல விமர்சனங்களுடன் நடைபெற்று முடிந்தது.
இந்த ஜி20 உச்சி மாநாடு தொடங்கிய நாள் முதலே பாரத் பிரச்சினையும் தொடங்கிவிட்டது. இந்த உச்சி மாநாட்டிற்கு, உலகம் முழுவது இருக்கும் முக்கிய தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். இதனால் டெல்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. மேலும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் சனிக்கிழமை (செப்.09) இரவு பாரத் மண்டபத்தில் விருந்து அளித்தாா்.
இந்த விருந்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. சமூக வலைதளத்தில், ஜி20 உச்சி நாட்டின் மாநாடு புகைப்படங்கள் வைரலானது.
அதில், பிரதமர் முன் இருந்த பாரத் பலகை முதல், அமெரிக்க ஒன்றியத்தின் அதிபரான ஜோ பைடனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் வரை அனைத்தும் பேசு பொருளானது. மேலும் ஜி20 மாநாட்டின் போது பாரத் மண்டபத்தில், மழைநீர் தேங்கிய படங்கள் சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாக (Memes) உருவெடுத்தன.
அதில் இங்காலந்து பிரதமர் ரிஷி சுனக் அவரது மனைவியை மழையில் நனையாத வண்ணம் குடைபிடித்தப்படி வலம் வந்த புகைப்படம் பல லட்சக்கணக்கான லைக்குகளை குவித்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது புகைப்பட செய்தியாளர்களிடையே (PHOTO JOURNALISTS) ஒரு குழப்பம் நிலவி வருகிறது. அதுதான், ஜோ பைடன் - மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை எடுத்தது யார் என்ற குழப்பம்.
தற்போது அதிக அளவில் இவர்களிடைய பேசப்பட்டு வருவதும் இந்த தலைப்பு தான். அதாவது, ஜி20 உச்சி மாநாட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்ள, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த பெரும்பான்மையான முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாத நிலையில், தென் மாநிலங்களைச் சோ்ந்த முதலமைச்சர்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா்.