சென்னை:அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் இறுதியில் தமிழகத்தில் மட்டும் 11 பேரை நபர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதில் எட்டு பேரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட எட்டு பேரிடம் இரண்டு நாட்களாக நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததும், இதற்காக பல்வேறு பண பரிமாற்ற வழிமுறைகளை அவர்கள் பின்பற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் தொலைபேசியில் சட்ட விரோதமாக பேசியதும், சமூக வலைதளங்கள் மூலம் ரகசிய குழுக்களாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த 15 நபர்கள் (இதில் பெரும்பான்மையானவர்கள் பி.எஃப்.ஐ. உறுப்பினர்கள்) துருக்கி உள்ளிட்ட நாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தது நடந்து முடிந்த சோதனையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டக்கனால் என்கிற பகுதிக்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதர்கள் ஆண்டிற்கு ஒருமுறை வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவும், அதேபோல நீதிபதிகள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
எனவே இந்த 15 பேருடன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரும் இணைந்து ஏதும் சதி திட்டம் தீட்டி உள்ளனரா...? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.
இதையு படிங்க: வீட்டில் தண்ணீர் வராததால் ஆத்திரம்...மண்வெட்டியால் மனைவி, மகளை கொலை செய்தவர் கைது