தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிரிழக்கும் செல்லப்பிராணிகள்: அஸ்தியை உரிமையாளர்கள் பெற புதிய ஏற்பாடு - chennai corporation

சென்னையில் விபத்து, உடல் நலக்குறைவால் உயிரிழக்கும் செல்லப்பிராணிகளின் அஸ்தியை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மாநகராட்சி விரைவில் புதிய ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.

உயிரிழக்கும் செல்லப்பிராணிகள்
உயிரிழக்கும் செல்லப்பிராணிகள்

By

Published : Jul 27, 2021, 2:56 PM IST

சென்னை:மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாய் பிடிக்கும் வாகனங்கள் மூலமாக தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு அவை வளர்ந்த இடங்களிலேயே விடப்படுகின்றன.

தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் சாலை, பேசின்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் விபத்து, உடல் நலக்குறைவால் உயிரிழக்கும் செல்ல பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றை அடக்கம் செய்வதற்கு கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தனி இடமும் உள்ளது .

மேலும் அங்கு செல்லப்பிராணிகளின் உடல்களை எரியூட்ட பிரத்யேக எரியூட்டும் மையம் அமைக்க முடிவு செய்துள்ள மாநகராட்சி இங்கு எரியூட்டப்படும் நாய், பூனைகளின் அஸ்தியை உரிமையாளர்கள் விரும்பினால் அவர்களிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: பாம்புகளின் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் பயணிக்கும் மனிதர்

ABOUT THE AUTHOR

...view details