தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2022, 7:29 AM IST

ETV Bharat / state

ஏறியது வர்த்தக சிலிண்டர் விலை.. 26 நாட்களாக ஏறாத பெட்ரோல், டீசல் விலை...

சென்னையில் 26 ஆவது நாளாக இன்றும் (மே.2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85-க்கு எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

petrol-diesel-price-unchanged-since-26-days ஏறியது சிலிண்டர் விலை.. 26 நாட்களாக ஏறாத பெட்ரோல், டீசல் விலை...
petrol-diesel-price-unchanged-since-26-daysஏறியது சிலிண்டர் விலை.. 26 நாட்களாக ஏறாத பெட்ரோல், டீசல் விலை...

சென்னை: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த இருபத்தி ஐந்து நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 26 ஆவது நாளாக இன்றும் (மே.2)மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. இதனிடையே, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை நேற்று (மே 1) ரூ.102.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,355.50 ஆக உள்ளது.

இதே போல, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41-க்கும், டீசல் விலை ரூ.96.67-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51-க்கும், டீசல் விலை ரூ.104.77-க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.119.09-க்கும், டீசல் விலை ரூ.94.79-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details