சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறைக்கப்படாமல் வரி அதிகரிக்கப்பட்டு அதிக விலைக்கே தொடர்ந்து விற்பனையாகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் 18ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி இன்று (ஆக.04) ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க:டெல்டா பகுதிகளை ஏலத்தில் இருந்து விலக்குக - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்