தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு நகரங்களில் செயல்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களை 10 மணி வரை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இனிமேல் நகரங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மூலிகை பெட்ரோல்: கேரள தனியார் நிறுவனத்துடன் ராமர் பிள்ளை ஒப்பந்தம்!